பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒருமைப்பாடு , 211,

பெருகு பரமா னந்தவெள்ளப்

பெருக்கே!' - 'விழித்துறங்கும் தொண்டர்

உழுவலன் பென்புருகநெக்கு அள்ளுற உள்ளே கசிந்துாறு

பைந்தேறல்'

என்பவற்றைக் காண்க.

இப்படியெல்லாம் உள்ளத்தே நின்று ஆனந்த ஆளற்றாகப் பெருக்கெடுக்கும் அம்பிகை எப்போதும் கண்ணுள் மணியாக நின்று, மெய்யான பார்வையை அருள் கிறாள். அன்னையின் அருள் பெற்ற பிறகு காணும். காட்சியே வேறு. அதற்கு முன் பஞ்சபூதப் பொருளாகத் தோற்றிய உலகம் இப்போது அம்மையின் திருவுருவாகத் தோற்றுகிறது. அவள் அன்பர்களின் கண்ணும் மணியாக நின்று இந்தக் காட்சியைக் காணச் செய்கிறாள். பக்தர் கள் பால் இரக்கம் கொண்டு இந்த நிலையை அருள்கிறாள்; கண்மணியாக நிற்கிறாள். -

அளிய என் கண்மணியே!

அபிராமிபட்டர் தம் கடைப் பிடியையும் அதனால் -விளைந்த அநுபவத்தையும் இந்தப் பாடலில் சொன்னார்.

கொள்ளேன் மனத்தில்கின் கோலம்.அல்

லாது; அன்பர் கூட்டங்தன்னை விள்ளேன்; பரசம யம்விரும்

பேன்; வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக் கும்புறம்

பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும் களியே,

அளியளன் கண்மணியே!

(விரிந்த மூன்று உலகங்களுக்கும் உள்ளே அந்தர்யாமி யாக உள்ள தாயே, எல்லா உலகங்களுக்கும் அப்பால்