பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்புகல் 2ig

ஆதலின் மணிமுதலாகப் பலவ ற்றைச் சொன்னவர் கடைசி

யில் மருந்தே என்றார்.

இனி, அப்பெருமாட்டியால் அமரருக்கும் நலம் உண் டாவதை நினைக்கிறார். பண்டாசுரன் முதலிய அசுரர்கள் தேவர்களுக்குத் தீமை புரிந்தனர்; நல்லோர் இயற்றும் வேள்விகளை அழித்து அமரர்களுக்குப் பலபடியான இன் ன்லகளை விளைவித்து நடுங்கச் செய்தனர். அமரர்கள் சிறந்த போகத்தை உடையவர்கள். தாம் செய்த புண்ணி யத்தின் பயனாகச் சிறந்த நுகர்ச்சிகளை நுகர்பவர்கள். இவ்வுலக வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து வரும். தேவலோக வாழ்வில் முழுவதும் இன்பமாகவே இருக்கும். ஆதலின் சொர்க்க வாழ்வு' தேவ போகம் என்றெல்லாம் பாராட்டிச் சொல்லும் முறை வந்தது. பல வகையான போக போக்கியங்கள் குறைவின்றி நிரம்பப் பெற்ற தேவர்கள், அசுரர்களால் தம் நிலை மாறித் துன்பத்தை அடைந்தார்கள். அவர்கள் பெற்ற போகம் தலைதடு. மாறியது, வேண்டியபொழுது வேண்டும் அளவில் உணவு' உண்ணுகின்றவன் கையிலிருந்து உணவைப் பறிப்பது போல அசுரர்கள் தேவர் வாழ்வைக் குலைத்தனர். உணவு' இழந்து பசியால் நலிவு பெற்றவரைப்போலத் தேவர்கள் ஆயினர். தம்முடைய ஆற்றல் பயன் பெறாது என்று' கருதி யாவரும் அம்மையைச் சரண் புகுந்தனர். அம்மை அசுரர்களைத் தொலைத்துத் தேவர்களுக்குப் ւյ65)4քեLII-էԼգ- . இன்ப வாழ்வை அருளினாள்.

'அமரர் வாழ்வு வாழ்வாக அமுத பானம் ஈவாளே”

என்று தக்கயாகப்பரணி இந்தக் கருணைச் செயலைப் பாராட்டும். இடையில் தம் போகத்தை இழந்து பட்டினிப் பட்டாளமாக நின்ற அமரர்கள் இப்பொழுது அன்னை யின் பேரருளால் முன்னையினும் சிறந்த போகத்தைப்