பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு ###

"அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே'

என்று தாயுமானவர் பாடுகிறார். 'இன்பநிலையை நான் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை;. அதுவே என்னை நாடிக்கொண்டு வருவதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழிதான் அடியார் கூட்டத்தில் சேர்ந்து அவர்களுக் குப் பணி புரிதல். அடியார்க்கு அடியான் ஆகும் ஆற்றலை நீ எனக்கு அருள் செய்தாயானால் அதுவே போதும்; அதன் வழியே நான் இன்பநிலை பெறுவேன்’ என்று நினைத்துப் பாடியது இது,

அடியாருடன் ஒன்றி வாழ்வதன் சிறப்பை உணர்ந்தே சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினார். அடியார் நடுவுள் இருக்கின்ற அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம், முடியா முதலே' என்று மணிவாசகர் இறைவனை வேண்டிக்கொண்டார். -

வீதியில் பெருங்கூட்டம் போகிறது. ஊரில் பெரிய திருவிழா. யாவரும் கோயிலை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்க்ள். ஓர் இளைஞன் தன் விட்டு வாசலில் வந்து பார்க்கிறான். கூட்டம் கோயில்ல் நேரக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்குச் சோம்ப்லாக இருக்கிறது. மனத்துள் பேர்க லாம் என்ற விருப்பம் சிறிது தோன்றினாலும் உடம்பு iணங்கமாட்டேன் என்கிறது. ஆனாலும் வர்சலில் நின்ற். வன் மெல்ல வீதிக்கு வருகிறான். எப்படியோ கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்கிறான். அப்புறம் அந்தக் கூட்டமே அவனை உந்தித் தள்ளிக்கொண்டு போகிறது. எப்படியோ கோயிலை அடைந்து விடுகிறான். இது உடம்பைப் பொறுத்தவரையில் நிகழும் நிகழ்ச்சி, -

எழில்-15 - . . . . . .”