பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as? அபிராமி அந்தாதி

(முதற் கடவுளராகிய திரிமூர்த்திகளுக்கும் தாயே, உலகத்து உயிர்களின் நன்மையின் பொருட்டு அபிராமி என்று போற்றப்பெற்று வரும்அரிய மருந்து போன்றவள்ே உன்னை யான் என்றும் மறவாமல் நிலையாக நின்று. துதிப்பேன்; இனி எனக்கு என்ன கவலை? (இப்பேறு கிடைத்ததற்குக் காரணம் என்ன?) நின் அடியவரின் பின்னே அவருக்கு ஆளாகத் திரிந்து, அவர்களைப் போற்றிப் பிறப்பை அறுப்பதற்குத் தக்கபடி, முன் பிற்வி களில் தவத்தைச் செய்திருக்கிறேன். - -

அடியாரைப் பின்னே திரிந்து பேணி என்று கூட்டுத். உலகுக்கு-உலகின் நன்மைக்காக.) -

இது அபிராமி அந்தாதியில் உள்ள 25-ஆவது பாட்டு.

漫懿