பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

அபிராமி அந்தாதி

உபாசகர்களே உணரும் நுட்பப்பொருளை, இறுதியிலே, வைத்தார் அபிராமிபட்டர். "இப்படி நூல்களும் பெரியோரும் உபமானமாக வரையறை செய்து வருணிக்கும் திருமேனியையுடைய அபிராமி என்னுடைய மேலான துணையாக இருக்கிறாள்" என்று முதற்பாட்டைப் பாடி நிறைவேற்றினார் பட்டர் உவமைகளைப்பற்றி விரிவாக ஆராய்ந்தோம். மற்றக் கருத்துக்களை இனிப் பார்ப்போம்.


2
விழுத்துணை

பிராமியம்மையின் சமுதாய சோபையை முதலில் தியானித்துக் கொள்கிறார், அபிராமிபட்டர். நெடுந்தூரத்தில் ஒருவர் வந்தால் அவருடைய உருவம் பிழம்பாகத் தெரியுமே அன்றி, அவருடைய அங்கங்களின் விரிவு தெளிவாகத் தெரியாது. அருகில் அணுக அணுக. உறுப்பு நலன்கள் தெரியவரும். இங்கே அம்பிகை பிரசனமாகும்போது முதலில் அவளுடைய திருக்கோலத் தேசு புலனாகிறது. அவளுடைய திருமேனி முழுவதும் பரவிப் படர்ந்து முழுமை பெற்ற லாவண்யம் தெரிகிறது. இனி மேல் அப்பெருமாட்டியின் எழில் தவழும் உறுப்புகளைப் பற்றிச் சொல்லப் போகிறார். இப்படிச் சொல்வது ஒரு மரபு. திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் முருகனுடைய கோலத்தை எடுத்துரைக்கிறார். அவனுடைய கால், கை, முகங்கள் முதலியவற்றின் அழகையும் சிறப்பையும் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் முதலில் அவனுடைய ஒளியுருவப் பிழம்பைக் காட்டுகிறார். நீல மயிலின்மேல் செக்கச்