பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிராமி அந்தாதி

25

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்,
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம், போது,
மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி. மென்கடிக் குங்கும
தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்
விழுத்துணையே.

(எழுகின்ற செஞ்சூரியன், உச்சியிலே மங்கையர் வைத்துக் கொள்ளும் கும்குமத்திலகம், அறிவுடையவர்கள் மதிப்பிடுகின்ற மாணிக்கம், மாதுளம்பூ, தாமரை மலரில் உள்ள திருமகள் துதிசெய்கின்ற மின்னல்கொடி, மெல்லிய நறுமணமுடைய குங்குமக் கலவை நீர் என்று அன்பர்கள் உவமையாக எடுத்துச் சொல்கின்ற திருமேனியை உடைய அபிராமியம்மை எனக்கு மேலான துணையானவள்.

உச்சி-தலையின் உச்சி. உணர்வு-ஞானம்; அறிவு. கடி-நறுமணம். தோயம்-நீர்.)

அபிராமி என்பதற்குப் பேரழகுடையவள் என்பது பொருள். அம்மையின் எழில் கண்டாரைத் தன்வயமாக்கிப் பேரின்பத்துள் ஆழ்த்துவது. "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" என்று இந்த அந்தாதியில் பின்னே வருகிறது.

"இத்தகைய அம்பிகை என் விழுத்துணை" என்று பாட்டை முடிக்கிறார் ஆசிரியர்.

விழுத்துணை-மேலான துணை. மனிதர்களுக்கு வாழ்க்கையில் பல வகையான துணைகள் இருக்கின்றன. ஜடமான கருவிகளும், உயிருடையவையும், மனிதர்களும் வெல்வேறு வகையில் துணையாக உதவுகின்றன. நெடுந்