பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரிபுர சுந்தரி
1
வேத உருவினள்

"ன்னுடைய விழுமிய துணை அபிராமி” என்று துதித்து முதற்பாட்டை நிறைவேற்றிய அபிராமி பட்டருக்குத் தொடர்ந்து கருத்து ஓடுகிறது. துணையென்றால் துன்புறும்பொழுது வந்து பாதுகாப்பது என்று தோன்றும். அன்னை ஒரு காலத்தில் ஓரிடத்தில் மட்டும் துணையாக வருபவள் அல்லள். அவள் எக்காலத்திலும், எல்லா இடத்திலும் எல்லா உயிர்களுக்கும் துணையாக இருக்கிறாள்.

துணையாக இருக்கும் ஒருவர் நம்மினும் தாழ்ந்தவராக இருக்கலாம்; நமக்குச் சமானமானவராக இருக்கலாம்; நம்மினும் உயர்ந்தவராக இருக்கலாம். வேலைக்காரனைத் துணை கூட்டிக்கொண்டு ஒரு செல்வர் ஊர்ப்பயணம் போகிறார். அவருக்குத் துணையாகச் செல்லும் ஏவலாளன் அவரை விடத் தாழ்ந்தவன். நாய்கூட நமக்குத் துணையாக வருவதுண்டு. இரண்டு நண்பர்கள் துணை சேர்ந்து வழிநடக்கிறார்கள்; அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒத்தவர்கள். தந்தையுடன் மகன் வழி நடக்கிறான்; அவன் இளம் பிராயமுடையவன். அவனுக்குத் துணையாகச் செல்லும் தந்தை அவனைவிட உயர்ந்தவர்.

இந்த வகையில் பார்த்தால் உயிர்களுக்கெல்லாம் துணையாக நிற்கும் பிராட்டியாகிய தேவி எல்லாரினும் உயர்ந்தவள்; நமக்குத் துணையாக வரும் எவ்வகைச் சக்தி