பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அபிராமி அந்தாதி

களிலும் சிறந்த பராசக்தி. உயர்ந்தவர்களைத் தொழுது வனங்குவது வழக்கம். அண்ணன், தமக்கை, தந்தை, தாய், மாமன், மாமி, வயசாற் பெரியோர்கள், ஆசாரியன், துறவி முதலியவர்கள் தொழுதற்குரியவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து தொழும்படி நிற்பது தெய்வம். அபிராமி நமக்குத் துணையாக இருப்பதோடு எல்லோரும் தொழும் தெய்வமாகவும் இருக்கிறாள். "திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது பழமொழி. வேறு யாரும் துணை இல்லாதவர்களுக்கும் துணையாக நின்று அருள் பாலிப்பவள் அம்பிகை; அதனால் அவளைக் காட்டிலும் சிறந்த துணை வேறு இல்லை; உயர்ந்த துணையும் இல்லை. அவள் யாவரும் தெர்ழும் தெய்வமாகவும் இருப்பவள்.

நமக்கு ஒருவர் துணை செய்தால் அவரை நாம் அறிந்துகொள்கிறோம். வேறு ஊரிலிருந்து பணம் அனுப்பி உதவி செய்தாலும் ஒரு சமயம் அவரைக் கண்டு நன்றியைத் தெரிவிக்கலாம். ஆனால் இறைவியோ தோன்றாத் துணையாக விளங்குகிறாள். தனுகரண புவன போகங்களை வழங்கி ஒவ்வொரு கணமும் நம்மைப் பாதுகாத்தாலும் அவள் இயல்பை யாரும் அறிந்துகொள்வதில்லை. இதுதான் அவளுடைய மாட்சி.

துணையும் தொழும் தெய்வமும்.
★ ★ ★

உயிர்கள் விரும்பிக் கேட்க, அதனால் அம்மை அவற் றிற்குத் துணையாக வந்து உதவுகிறாள் என்று சொல்வ தற்கு இல்லை. அவளுடைய இயற்கை அது. கதிரவன் வானிலே தோன்றி ஒளிர்வது போலவும், திங்கள் நிலவு வீசுவது போலவும் அவள் தன் அருளை வழங்கி உயிர்களைக் காப்பாற்றுகிறாள். நீ காப்பாற்ற வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்வதையோ,