பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதியில் பின்னே ஒரு பாடலில்,

"அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி"

என்று பட்டர் பாராட்டுகிறார்.

இவ்வாறு விளங்கும் அம்பிகையின் அடையாளங்களை அடுத்தபடி சொல்ல வருகிறார்.


2
திருக்கோலம்

ம்பிகையின் சமுதாய சோபையை முதல் பாட்டில் சொன்ன அபிராமி பட்டர் இரண்டாவது பாட்டில் அந்தப் பெருமாட்டியின் திருவுருவத்தைக் கூர்ந்து நோக்கித் தியானம் பண்ணுவதற்குரிய அடையாளங்களைச் சொல்ல வருகிறார். சுருதிகளின் பனையென்று, படர்ந்த கிளைகளை முதலில் சொன்னதுபோல், இருபுறமும் விளங்கும் திருக்கரங்களை முதலில் வருணிக்கிறார். -

பனிமலர்ப்பூங்

கணையும் கருப்பஞ் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுரசுந்தரி.

அம்பிகையின் நான்கு திருக்கரங்களிலும் உள்ள பொருள்களைக் கூறுகிறார். அழகே திருவுருவாக அமர்ந்த அன்னையின் திருக்கரங்களில் அழகிய பொருள்கள் இருக்கின்றன. அவளுடைய வலக்கரங்கள் இரண்டில் மேல் கரத்தில் ஐந்து மலரம்புகளையும் அதற்கு இணையான மேல் இடக்கரத்தில் கரும்பாகிய வில்லையும் வைத்திருக்கிறாள். பாசத்தைக் கீழ் இடக்கையிலும் அங்குசத்தைக் கீழ் வலக்கரத்திலும் வைத்துக்கொண்டிருக்கிறாள். இவை யாவும் படைக்கலங்களாக உதவு