பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அபிராமி அந்தாதி

பைத்தியக்காரன் ஒட்டை உடைசல்களை யெல்லாம் பொருக்கிச் சேர்த்துச் சுமப்பதுபோல நம்முடைய மூளையில் பயனற்ற பொருள்களை ஏற்றிக்கொண்டு திண்டாட வேண்டி வரும். அபிராமிபட்டர் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்துகொண்டார். தமக்குத் துணையாக இருக்கும் தெய்வம் மகாமாதாவாகிய திரிபுரசுந்தரி என்ற உணர்வு வந்தது.

அறிய வேண்டிய துறைகளை அறிந்துகொண்ட அளவில் நின்றுவிட்டால், பெற்ற அறிவுக்குப் பயன் இல்லை. ரெயில் வண்டி எந்த நேரத்தில் புறப்படுகிறது, எப்போது குறிப்பிட்ட ஊரை அடைகிறது என்பவற்றைத் தெரிந்து கொள்வது எதற்காக? அந்த வண்டியில் ஏறி ஊருக்குப் போவதற்காகத்தான். ஊர்ப்பயணம் செய்யாதவன் வண்டி புறப்படும் நேரம் முதலியவற்றைத் தெரிந்துகொண்டும் பயன் அடையாதவன்.

பலர், நூல்களைப் படித்து உலகம் நிலையாதது என்பதையும், குருநாதன் கிருபையைப் பெற்றால்தான் ஆத்மானந்தம் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டிருப்பார்கள்; பிறருக்கும் எடுத்துச் சொல்வார்கள். ஆனால் தாம் ஒன்றும் செய்யமாட்டார்கள். அவர்கள் கற்ற கல்வியினால் பயன் என்ன?

"ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
"பேதையிற் பேதையார் இல்"

என்பது திருக்குறள் அத்தகையவர் முட்டாள்களில் பெரியவர் என்று சொல்கிறது. அது.

ஆதலின் அறிந்ததைப் பயன்படுத்திக்கொண்டு செயலில் ஈடுபடவேண்டும். அப்போதுதான் எதனைப் பெற வேண்டுமோ, அந்தப் பேறு கிடைக்கும். பெண் ஒருத்தியின் படத்தை வைத்துக்கொண்டு ஒரு குமரன்,