பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அபிராமி அந்தாதி

இடம் என்பதைத் தெரிந்து அதனைப் பற்றிக் கொண்டார்.

திருவடிதான் பக்தர்களுக்குத் துன்பம் போக்கி இன்பத்தைத் தருவது. அம்பிகையின் மலரடி, பற்றிக்கொள்ளும் அடியவர்களுக்கு மெத்தென்று இருந்தாலும், எல்லா வகைத் துன்பங்களுக்கும் உரமான கவசமாக இருந்து பாதுகாப்பது. அடியைப் பற்றிக்கொள்வதனால்தான் பக்தர்களுக்கு அடியார் என்ற பெயர் வந்தது. "பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்" என்று கம்பர் பாடுவார்.

"திருவடிக்கே செறிந்தேன்" என்று ஏகாரம் போட்டுப் பாடுகிறார். அது பிரிநிலை ஏகாரம். வேறு எதனோடும் செறியாமல் திருவடியினிடமே பற்றுக்கொண்டு புகல் அடைந்தார். நமக்கும் சில சமயங்களில் அம்பிகையினிடம் அன்பு மின்னற் கீற்றுப்போலத் தோன்றுவதுண்டு. பெரிய பக்தர்களைக் கண்டாலும், சைதன்யம் மிக்க சந்நிதி களுக்குச் சென்று தரிசித்தாலும், சிறந்த நூல்களைச் சொல்லக் கேட்டாலும் அன்னையின் திருவடி ஒன்றே பற்றுக்கோடு என்ற உண்மை நமக்குப் புலனாகும். ஆனால் அடுத்த கணத்தில் அந்த எண்ணத்தை மாற்ற நூறு நூறு உலகியலெண்ணங்கள் வந்து மோதும். ஆயிரம் எண்ணங்களுக்கிடையே அம்பிகையின் திருவடி எண்ணமும் ஒன்றாக வந்து மறைந்து விடும்.

ஆனால் அவளுடைய உபாசகர்களுக்கோ வேறு நினைவே இராது. ஏது செய்தாலும் அவளுடைய மலரடி களுக்கே அர்ப்பணம் செய்வார்கள். அந்த அடிமலரில் ஊதும் வண்டாக அவர்கள் உள்ளம் இருக்கும்.

"உன்னுடைய திருவடியினிடத்தே பொருந்தினேன் "என்று சொன்னவர் மேலே, "அப்படிப் பொருந்தியிருக்