பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அபிராமி அந்தாதி


பட்டர் அம்பிகையை, "திருவே!" என்று விளிக்கிறார். திரு என்பது செல்வத்துக்கும் திருமகளுக்கும் பெயர்.

அம்பிகைதான் பக்தர்களுக்குச் சிறந்த செல்வம். அன்றி, மகாலக்ஷ்மி என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. திருமாலின் சக்தியாகிய திருமகளாக இருந்து உலகுக்கு அனைத்துச் செல்வங்களையும் வழங்குபவள் அம்பிகையே. கோலாபுரம் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் தேவிக்கு மகாலக்ஷ்மி என்ற திருநாமம் வழங்குகிறது; மைலார தந்திரத்தில் அம்பிகையின் அம்சமான மகாலக்ஷ்மி, மகாலன் என்ற அசுரனை அழித்தாள் என்ற செய்தி வருகிறது. பதின்மூன்று பிராயமுள்ள கன்னிகை உருவாக இருப்பதனால் திருவென்று பெயர் வந்ததென்றும் கொள்ளலாம்.

செல்வத்துக்குத் தலைவியாக இருப்பது பற்றித் திருவே என்று அமைத்ததாகவும் கொள்ளலாம். "தநாத்யக்ஷா" என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

அவள் நுட்பமான செல்வமாக இருப்பவள். ஆதலின் அவள் செய்திகளெல்லாம் இரகசியமானவை. அந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டு, ஈடும் எடுப்பு மற்ற அச்செல்வத்தைப் பற்றிக்கொண்டவர் அபிராமிபட்டர்.

அறிந்தேன் எவரும் அறியா
மறையை; அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திரிவடிக்
கே; திரு வே,வெருவிப்
பிறிந்தேன்கின் அன்பர் பெருமைஎண்
ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நர குக்குஉற
வாய மனிதரையே!