பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தரி பாதம் 59ド

"மனிதரும் தேவரும் மாயமுனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடி"யிலே நின்றார். இன்னும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. அவர்கள் தம் சென்னியை அம்பிகையின் திருவடியில் வைத்து வணங்குகிறார்கள் என்று சொன்னவுடன், "தாயே, நானும் உன் திருவடியில் என் சென்னியை வைக்கிறேன்." என்று சொல்ல வந்தார். 'தேவரும் முனிவரும் வயசுவந்த பிள்ளைகள்; நாம் இளம் பிள்ளை; நமக்கு அதிக உரிமை உண்டு அம்பிகையிடம்’ என்று எண்ணினார் போலும்! 'உன் திருவடியை என் சென்னியில் வைத்துக்கொள்கிறேன்' என்று உரிமையுடன் சொல்லுகிறார். அபிராமி அந்தாதியின் ஐந்தாவது பாட்டில் அவ்வாறு பாடுகிறார்.

冰 §§ 事

"அம்பிகை பாதம் என் சென்னியில் இருக்கிறது" என்ற பாட்டை நிறைவு செய்ய வருகிறவர், அதற்கு முன் அம்பிகையின் பெருமையைப் படர்க்கையில் வைத்துச் சொல்கிறார்.

அம்பிகையின் திரிபுரசுந்தரி. திரிபுரை என்றும் அப்பெருமாட்டிக்குப் பெயர் உண்டு. புரை என்பது மூத்தவள் என்னும் பொருளுடையது. மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்னும் பொருளை உள்ளடக்கியது திரிபுரை என்னும் திருநாமம் என்று கூறுவர். திரிபுரங்களுக்குத் தலைவி என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டாவது பாடலின் விளக்கத்தில் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்தின் பொருளைச் சொல்லும்போது திரிபுரங்கள் இன்னவை யென்று சிந்திக்க முடிந்தது அல்லவா?

திரிபுரை என்ற திருநாமத்தை அபிராமி பட்டர் முப்புரை என்று மாற்றிச் சொல்கிறார். மூவகையான