பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தரி பாதம் . 6

கிறாள். ஆம், அவள் செய்யும் செப்பிடு வித்தைக்கு ஈடும் எடுப்பும் இல்லை.

பெருமாட்டியின் இரண்டு நகில்களும் செப்பை உவமையாக உரைக்கும் வடிவுடையன; அன்னையின் மருங்குலை வருத்துவன.

செப்பு உரைசெய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்,

புணர்முலை-இரண்டு தனங்கள்; காமேசுவரனோடு ஒன்றுகின்ற தனங்கள் என்றும் சொல்லலாம், இத்தகைய மருங்குலையுடைய மனோன்மணி என்று அம்பிகையைப் புகழ்கிறார்.

மனோன்மணி என்பது தமிழில் மனோன்மணி என்று வந்தது. லலிதாம்பிகையின் திருநாமங்களில் மனோன் மணி என்பது ஒன்றி. அத் திருநாமத்துக்கு மனத்தை ஞான நிறைக்கு எழுப்புகிறவள் என்பது ஒரு பொருள்.ஸ்ரீவித்தியாஸ்தரூபியாக அம்மை ஞானத்தை அடியார்களுக்கு அருள்பவள். ஞானப் பெட்டகமாகிய வடிவை உடையவள். தன்னை விரும்பி குழந்தையாகியவர்களுக்கு ஞானப்பாலை ஊட்டுகிறவள். ஞானத்தின் உறைவிடத்தையே தனமாகக் கொண்டவள் என்று நினைத்தவுடன், அவள் ஞான நிலைக்கு மனத்தை ஏற்றும் தகைமையினள் என்ற நினைவும் வந்து, அதனைக் குறிக்கும் திருநாமமாகிய மனோன்மணி என்பதும் நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றையும் சேர்த்து,

புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி

என்று பாடுகிறார்.

புருவ மத்திக்குமேலே பிரமரத்திரத்திற்குக் கீழே உள்ள இந்து முதலிய எண்வகை நிலைகளில். இறுதி