பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

..62 அபிராமி அந்தாதி

நிலை உன்மணி அல்லது மனோன்மணியாகும். அவ்விடத்தே உறைதலின் அன்னைக்கு மனோன்மணியென்ற இருநாமம் வந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. மனம் பற்றற்றுச் சலனமற்று இயங்காமல் நிற்கும். நிலை உன்மனி என்று கூறுவர். அந்த மனோலயத்தை அருளுவதனால் இந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வ்தும் பொருந்தும்.

அடுத்தபடி, அம்பிகை செய்த திருவிளையாடல் ஒன்றைச் சொல்ல வருகிறார், முப்பத்து முக்கோடி தேவர்களும் அமுதம் கடைந்தார்கள். அப்போது அவர்கள் சிவபெருமானை எண்ணவில்லை அங்கு முதலில் உச்சைசிரவம், ஐராவதம் முதலிய பொருள்கள் வந்தன. அவற்றைத் தேவர்களிற் சிலர் தங்களுக்கென்று எடுத்துக் கொண்டனர். இன்னும் 'அமுதம் தோன்றவில்லை. ஆனல் ஆலகால நஞ்சு தோன்றியது. அதனைக் கண்ட அமரர் அஞ்சு நடுங்கினர்; அமுதம் வராமல் இருந்தாலும் இருக்கட்டும்: இந்த நஞ்சு நம்மை அழிக்காமல் இருக்க வேண்டுமே!’ என்று மனம் குலைந்து வருந்தினர். அப்போதுதான் அவர்களுக்குச் சிவபெருமானின் நினைவு வந்தது, அவனிடம் ஒடிச் சென்று தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அடியில் வீழ்ந்து புலப்பினர். இறைவன் அந்த நஞ்சை வாங்கி உண்டான், புறத்திலே உள்ள தேவர்கள் அழியாமல் இருக்க அதனை எடுத்து விழுங்கினான். .

ஆனால், அவன் திருவயிற்றுள் எத்தனையோ கோடி அண்டங்கள் உள்ளனவே! உள்ளே சென்று அவற்றை அழித்துவிட்டால் என் செய்வது? இந்த எண்ணம் அம்பிகைக்கு உண்டாயிற்று. இறைவன் நஞ்சை விழுங்கத் தொடங்கியவுடன் பிராட்டி தன் கரத்தால் இறைவன் கழுத்தை அனைத்துக்கொண்டாள். இந்த