பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73

தயிரும் மத்தும்

என்று பட்டினத்தார் இந்தப் பயணத்தால் உண்டான சலிப்பைச் சொல்கிறார்.

இப்படி மேலும் மேலும் பிறந்து உழலுவதால் உண்டாகும் தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளும் வழியாது? கடவுளின் அருள் இருந்தாலன்றி இந்தத் தளர்ச்சி நீங்காது.

அபிராமிபட்டர் அம்பிகையை இந்தத் தளர்ச்சியைப் போக்கியருள வேண்டுமென்று வேண்டுகிறார்; தளர்ச்சி இல்லாத கதியை அடையவேண்டுமென்று விரும்புகிறார்.


தயிரைக் கடையும்போது கயிற்றில் அகப்பட்ட மத்து, சுழன்று சுழன்று தயிரினிடையே ஆடுகிறது, ஒரே மாதிரி சுழலுவதில்லை. கயிற்றை இழுத்துக் கடைகிறவர் இரண்டு கைகளாலும் அதன் இரு முனையையும் பிடித்து இழுப்பதால் மாறி மாறிச் சுழல்கிறது. வலக்கையால் கயிற்றை இழுக்கையில் மத்து வலமாகச் சுழல்கிறது. இடக்கையால் இழுக்கும்போது இடமாகச் சுழல்கிறது. இப்படியே மாறி மாறி அது சுழன்று தயிரைக் கடைகிறது, மத்துத்தான் தயிரைக் கடைவது போலத் தோன்றினாலும் அதைக் கருவியாக்கி ஒரு பெண்மணி கடைகிறாள். பிரபஞ்சமென்னும் சட்டியில் இன்ப துன்ப அநுபவங்களிடையே சுழலுகிறது, உயிராகிய மத்து. அதற்குக் காரணம் புண்ணிய பாவவினைகளாகிய கயிறு. ஒரு தலைப்புப் புண்ணியம்; மற்றொரு தலைப்புப் பாவம்.

"அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால்"

என்பது திருவாசகம்,

புண்ணிய பாவ வினைகள் காரணமாகவே நாம் இன்ப துன்பங்களை அடைகிறோம். அந்த வினைகள் நம்