பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அபிராமி அந்தாதி

தொழிலை ஓர் அதிகாரியிடம் ஒப்புவித்திருக்கிறாள், அவன்தான் பிரமன், தாமரையாதனத்தில் வீற்றிருக்கும் கமலாலயன். காப்புத் தொழிலைத் தன் அண்ணனிட்ம் விட்டிருக்கிறாள்; அந்த அண்ணன்தான் திருமால். முடிக்கும் தொழிலைத் தன் கணவரிடமே ஒப்படைத்திருக்கிறாள். எல்லா வேலைகளுக்கும் முடிவான வேலை அது: பொறுப்பான வேலை. அதற்குக் கண்டவர்களைப் போடலாமா? தன் அந்தரங்கம் தெரிந்தவரைப் போடுவது தானே பொருத்தம்? -

பெரிய கடை ஒன்று; லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. கொள்முதல் செய்ய வேலைக்காரர்கள் போவார்கள். கடையில் சரக்கை விநியோகம் செய்ய ஆட்கள் இருப்பார்கள். கடைசியில் கடையை மூடும் போது பணத்தைக் கணக்குப் பார்த்து, எல்லாவற்றையும் மூடிக் கடைசிக் கதவையும் மூடுவதற்கு, யார் மிகவும் நம்பிக்கையானவர்களோ அவர்களைத்தானே வைப்பார்கள்? கடைசியில் கதவை மூடுவதையும், முதலில் கடையைத் திறப்பதையும் அந்த மனிதரிடம் ஒப்படைத் திருப்பார்கள்.

அதுபோலச் சிருஷ்டியையும் திதியையும் இரண்டு பேர்களிடம் வைத்த எம்பெருமாட்டி சங்காரத் தொழிலைத் தன் மகிழ்நனுக்கு வழங்கியிருக்கிறாள் அவன் நல்ல அறிவாளி; மதி படைத்தவன். அவன் சடையில் சந்திரன் ஒளிர்கிறான். அவன் மிக்க ஞானம் உடையவன் என்பதற்கு இது அடையாளம். மதியுறு வேணி மகிழ் நனைச் சிறந்த பொறுப்பான வேலையில் வைத்து, எல்லா வற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு விளங்குகிறவள் இந்த அருட் பேரரசியாகிய இராஜராஜேசுவரி,

அதிகாரிகள் தங்களை நம்பி அதிகாரத்தை அளித்த வரை வணங்குவதும் புகழ்வதும் இயல்பு. இங்கே