பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81

அழியாத கன்னிகை

அவர்களிற் சிலர் தாமாக முயன்று அவளை அடைய எண்ணுகிறார்கள். பேதைக் குழந்தைகள் பலர் பவபந்தத் தினின்றும் விடுபட அறியாமல் தியங்கிக் கதறுகிறார்கள். அவ்ர்கள் தம் அன்னை இவள் என்று உணர்ந்து உருகி னால் அவள் கருணை மிக்கு அவர்களை அடைந்து அவர்க ளுடைய பாசக்கட்டை நீக்கிவிடுகிறாள். என்னுடைய பாச் விலங்கையெல்லாம் எம்பெருமாட்டியே கருணையி னால் என்பால் எழுந்தருளி வந்து அரிந்தாள்' என்று கூறுகிறார் அபிராமிபட்டர்.

என் பாசத் தொடரை எல்லாம் வந்து அரி சிந்துர வண்ணத்தினாள். பாசத்தினால் கட்டுப்பட்ட பசு அந்தப் பாசத்தினின் றும் விடுபடுவதே முக்தி. பாசத்திற் கட்டுப்படிாமல் இருப்பது பரப்பிரம்மமாகிய பதி. பாசக்கட்டு நீங்கினால் பகவானது பதியோடு சேர்ந்துவிடும். அந்தப் பாகம் நீங்கப் பசுக்கள் பல பல முயற்சிகளைச் செய்கின்றன. இறைவன் திருவ்ருள் இல்லாவிட்டால் பசுவினுடைய

முயற்சியினால் பாசவிமோசனம் உண்டாகாது,

என்னுடைய பாசத்தை நீக்கும் முயற்சியை ந்ான் செய்ய வேண்டும். அதற்குரிய ஆற்றல் எனக்கு இல்ல்ை. நான் எம்பெருமாட்டியே கதி என்று இருந்தேன். அன்னை என்னுடைய நிலையை உணர்ந்து தானே என்னை அணுகி என் பாசத் தொடரை அரிந்துவிட்டாள் என்ற எண்ணங் களை உள்ளடக்கி, . .

     என் பாசத்தொடரை எல்லாம்
     வந்து அரி

என்கிறார். பசுபாச விமோசனி, பாசஹந்த்ரி என்பன 'அம்பிகையின் திருநாமங்கள். அவளை அடையாளம் கண்டு கொண்டவராதலின்,

எழில்.-6