பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90

அபிராமி அந்தாதி

அந்தக்கைகளில் உள்ள வில்லும் அம்பும் அகக்கண்ணிலே தோன்றுகின்றன, அவள் கையில் இருப்பவை கரும்பு வில்லும் மலரம்புகளும் அல்லவா?

செங்கைச் சிலையும் அம்பும்.

உடனே அவருடைய தியானம் எம்பிராட்டியின் முகமண்டலத்துக்குத் தாவுகிறது. அம்மை புன்முறுவல்: பூத்து நிற்கிறாள். அந்த முறுவலுக்கே நூறு பாட்டுச் சொல்லியிருக்கிறார் மூககவி. மயிலிறகின் அடிக்குருத்தை, அழகிய பல்லுக்கு உவமை சொல்வது மரபு. அபிராமியின் புன்னகை பூக்கும் பற்கள் முருந்தைப்போல (மயிலிறகின் அடிக்குருத்தைப்போல) இருக்கின்றன.

முருத்தன மூரலும்

தேவி தன் அங்க நலன்கள் தோன்றக் காட்சித்தர வேண்டுமென்று ஆசைப்பட்ட ஆசிரியர் ஒவ்வோர் அங்க மாகச் சொல்வி வந்தார். நகிலைச் சொல்வி மாலையையும் வில்லையும் அம்பையும் சொல்லி முறுவலையும் சொன்னார். இனி ஒவ்வொன்றாகச் சொல்லிக் சொண்டிருக்கப் பொறுமை இல்லை; நேரமும் இல்லை, நீ உன்னுடைய திருவுருவமும் முற்றும் தோன்ற எழுந்தருளி வந்து என்முன்னே நிற்கவேண்டும்' என்று சொல்லி முடிக்கிறார்.

நீயும் அம்மே, வந்து என்முன் கிற்கவே.

சில அங்கங்களைச் சொன்னவர் மற்றவற்றைச் சொல்லி முடியாது என்று எண்ணி, அங்கியையே சொல்லி விடுகிறார்.

உள்ளத்திலே எண்ணி எண்ணிக் கோலம் காண்பது: போதாதென்று கருதி, என் முன்னிலையிலே வந்துநின்று: காட்கி அருளவேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்கிறார்.