பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8


அழுது கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக ஒட்டைச்சிவிங்கி ஒன்று வந்தது. குட்டிமுயல் அதைக் கூப்பிட்டது.

”சிவிங்கியாரே,சிவிங்கியாரே,வானத்து உச்சியில் உள்ள அப்பத்தைப் பிடிக்க என்னால் முடியவில்லை. உங்கள் நெட்டைக் கழுத்தை நீட்டி அதை எனக்குப் பிடித்துத் தாருங்கள்” என்று குட்டி முயல் கேட்டது.

பாவம் குட்டி முயல் வானத்து அப்பத்துக்காக மிகவும் ஏங்குகிறது; பிடித்துத் தான் கொடுப்போமே என்று கூறிக் கொண்டே ஒட்டைச்சிவிங்கியார் தன் நெட்டைக் கழுத்தை நீட்டி அந்த அப்பத்தைப்பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வானத்து அப்பத்தை அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை,

”குட்டி முயலே, குட்டி முயலே இங்கே வா. என் தலையில் ஏறிக்கொள். உன்னை நான் வீசுகிறேன். நீ பாய்ந்து சென்று அந்த அப்பத்தைப் பிடித்துக் கொள்” என்று கூறியது.

உடனே குட்டி முயல் பரபரவென்று ஒட்டைச் சிவிங்கியின் மேல் ஏறி முதுகுக்குச் சென்று கழுத்தின் வழியாகத் தலை உச்சியை அடைந்தது. அதன் தலையில் ஏறி நின்றவுடன் ஒட்டைச் சிவிங்கி தன் தலையை வேகமாக ஆட்டி குட்டி முயலை ஒரு தட்டுத் தட்டி உயரத்தில் வீசி விட்டது.