2
ஓநாய் வயிற்றில்
ஒரு குட்டி முயல்
ஒரு காட்டில் ஒரு பெரியமுயல் இருந்தது. அதற்கு நான்கு குட்டிகள். அந்தக் குட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்தன. உடம்பில் வலு ஏற்பட்டதும் துள்ளிஓடி விளையாடின. ஒடத் தெரிந்து விட்ட அவற்றிற்கு நல்லது கெட்டது தெரியவேண்டும் என்று தாய் முயல் விரும்பியது. இல்லாவிட்டால் வெள்ளை மனம் படைத்த அவற்றைத் தீங்கு வந்து சூழ்ந்து கொள்ளும் என்று அது அஞ்சியது.
ஒரு நாள் தாய்முயல் குட்டிமுயல்களைக் கூட்டிக் கொண்டு காட்டைச் சுற்றிக் காட்டியது.
மரம், செடி கொடிகளை யெல்லாம் அது காட்டியது. எந்தெந்த இலைகளைத் தின்னலாம், எது எதைத் தின்னக்கூடாது, எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்றெல்லாம் அது விளக்கிச் சொல்லியது. அது ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிச்சொல்லச் சொல்ல மூன்று குட்டிமுயல்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன. சொன்னவற்றையெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டுச் சொல்லிப் பார்த்துத்