உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11


தெரிந்து கொண்டன. ஆனால் ஒரு முயல்குட்டி அப்போது, தாய் சொன்ன செய்திகளைக் கவனிக்காமல், பாப்பாத்திப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அது தன் வாழ்க்கைக்கு வேண்டிய அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தது.

தாய் முயல் அடுத்த பாடமாகப் புல் வகைகளைப் பற்றி விளக்கிக் கூறியது. எந்தெந்தப் புல் சுவையாக இருக்கும். எது தின்றால் உடம்புக்கு நல்லது, எது கெட்டது என்றெல்லாம் விளக்கிச் சொல்லியது. சில முட் செடிகளைக் காட்டி, இவற்றின் இலைகள் இருக்கிற பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. நச்சுத்தன்மையுள்ளவை என்றெல்லாம் எடுத்து விளக்கியது.

அந்த ஒரு முயல் குட்டி தவிர மற்ற குட்டிகள் எல்லாவற்றையும் கவனமாகத் தெரிந்து கொண்டன. அதுமட்டும் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஏதேதோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அடுத்தாற்போல் பெரிய முயல், குட்டிகளுக்கு விலங்குகளைப் பற்றிக் கூறியது.

இதோ இந்தச் சிறிய அடிச்சுவடுகள் அணிலின் சுவடுகள். கீறல் கீறலாக இருக்கும் இந்தச் சுவடுகள் காட்டுக் கோழிச் சுவடுகள். கலைமான்களின் சுவடு களைப் பார்த்தீர்களா? பெரியவை. கலைமான்களும் பெரியவைதான். ஆனால் நமக்கு அவற்றால்