பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12


துன்பமில்லை. குள்ளநரிகள் ஓநாய்கள் நமக்குத் துன்பம் தருபவை. ஏன் நம்மையே உண்டு வாழ்பவை. அவற்றின் சுவடுகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவை சென்ற பாதையில் கூடச் செல்லக்கூடாது.

மூன்று முயல் குட்டிகளும் தாய் சொன்ன அந்தச் செய்திகளை நன்றாகக் கவனித்து மனத்தில் இருத்திக் கொண்டன. ஓநாய்கள், நரிகள் வாழக் கூடிய இடங்கள், அவை கையாளும் போர்த்தந்திரங்கள், மற்ற விலங்குகளை அவை வேட்டையாடும் முறைகள், உணவாகக் கொள்ளும் வழக்கம் எல்லாவற்றையும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன.

நான்காவது முயல்குட்டியோ, எந்தக் கவலையும் இல்லாமல் வெட்டுக் கிளிகளை விரட்டி விரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

நாள்தோறும் தாயின் சொல்லைக் கவனித்துக் கேட்டுக் கட்டுப்பாட்டோடு வளர்ந்த முயல் குட்டிகள் பெரிதாக வளர்ந்தன, நான்காவது குட்டியும் பெரிதாகி விட்டது.

இனிமேல் நீங்கள் விருப்பம் போல் காட்டுக்குள் போய் வரலாம். என் துணை வேண்டியதில்லை. இனி மேல் நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழுங்கள்! என்று கூறி அவற்றைத் தனிவாழ்க்கை நடத்த அனுப்பியது தாய்,