பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மாதவன் வியப்புடன் சொன்னார். “நானும் வனத்துறையில் பத்து ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். மரமேறும் முயலை இது வரை பார்த்ததேயில்லை. இது ஒரு விந்தைதான்!”

“விந்தையல்ல; மூடத்தனம்” என்று ஒருகுரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மற்றொரு வனத்துறை அதிகாரி குமரன் என்பவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.