பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மீது ஏறிப் பார்த்தது. புல்வெளி முன்னைப் போலவே இருந்தது. புல் அனைத்தும் தள தள வென்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

முயலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

நல்ல வேளை! கனவுதான் கண்டேன். இல்லா விட்டால்--என் முட்டாள் தனமான சாபம் நிறைவேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!

கடவுளே! என்னைப் போன்ற மூடர்களின் சாபம் பலிக்காமல் செய்யும் உனக்கு ஆயிரம் நன்றி! ஆயிரம் வணக்கம்!

இவ்வாறு கூறிக் கொண்டே முயல் புல் வெளியை நோக்கித் தாவிப் பாய்ந்து ஓடியது.