பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

செய்தியாளர்களைக் கண்டபிறகுதான் வானொலிக்கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தெரிவிக்கவில்லை என்பது நினைவு வந்தது.

செய்தியாளர்கள் யானையாரைச் சூழ்ந்து கொண்டார்கள். காட்டில் இன்று என்ன சிறப்பு என்று கேட்டார்கள்.

சிறப்பாக ஒன்றும் இல்லை. விளையாட்டுப் போட்டி ஒன்று வைப்பதென நேற்று ஒரு முடிவெடுத்தோம். பொதுக்குழு முடிவின்படி இன்று உடனே போட்டி வேலைகளைத் தொடங்கி விட்டோம்.

“உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி கிடைத்தது?” என்று யானையார் கேட்டார்.

உலகில் எந்த மூலை முடுக்கில் எது நடந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.

“காற்று நுழையாத இடத்திலும் கடவுள் நுழைவார், அவர் நுழையாத இடத்திலும் நாங்கள் நுழைந்து விடுவோம்.” என்று செய்தியாளர்கள் கூறினார்கள்

யானையார் வந்திருந்த பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராகத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தார்.

போட்டிகள் தொடங்கின. முதலில் பொட்டல் வெளி நடுவில் ஐந்து கழுதைகள் வந்து நின்று கடவுள் வாழ்த்துப் பாடின. ஐந்தும் ஒரே குரலில் ஒருமித்துப்