பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பாடியபோது அவற்றின் குரல் கைலாசத்துக்கு எட்டியிருக்க வேண்டும் என்று மிருகங்கள் பேசிக் கொண்டன.

அடுத்து நடனப் போட்டி நடை பெற்றது.

ஆறு மயில்கள்.

மூன்று மூன்று எதிர்க்கட்சியாக இருந்து தோகை விரித்து தாளத்திற்கேற்பக் கால்போட்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அடுத்தது குரங்குகள். கைகூப்பி வணக்கம் சொன்னபின் அவை குட்டிக் காரணம் போட்டே மேடையை வலம் வந்தன. அவை செய்த வேடிக்கையைப் பார்த்துக் கூடியிருந்த விலங்குகள் அனைத்தும் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தன.

அடுத்தது மல்யுத்தம்.

இரண்டு காட்டானைகள் ஒன்றை யொன்று மோதிச் சண்டையிட்ட காட்சி உடம்பு நடுங்க வைத்தது. துதிக்கையால் வளைத்தும் காலால் மிதித்தும், கட்டிப் புரண்டும் படுபயங்கரமாகச் சண்டையிட்டன.

எருதுச் சண்டையைப் பார்த்த போது, யானைச் சண்டை சாதாரணமாகி விட்டது.

சேவற் சண்டை கண்ணுக்கு விருந்தாயிருந்தது.

புலிச்சண்டை தான் எல்லாவற்றிலும் பயங்கரமாய் இருந்தது. சில விலங்குகள் பயந்து கண்ணை மூடிக் கொண்டன. சில அந்தத் திடலை விட்டு ஒடியே போய் விட்டன!