உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


இவற்றையெல்லாம் கண்ட அந்த வெள்ளை முயலுக்கு குழப்பமாய் இருந்தது. பந்தயம் முடிவதற்குள் இந்தக் காட்டு விலங்குகள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன. ஏன் ஓடி விட்டன. பரிசு கொடுக்க வேண்டிய அந்த யானையார் எங்கே என்றெல்லாம் அது நினைத்துக் குழம்பியது.

அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த குட்டி மான் ஒன்று அதன் அருகில் வந்தது. “முயல் அண்ணா நேற்று நீ எங்கே போய் விட்டாய்? பந்தயத்தில் ஓடியதும் பரிசு வாங்காமல் எங்கே போனாய். யானையார் உனக்காக அரைமணி நேரம் காத்திருந்தார். எல்லாரும் கலைந்து போன பிறகும் கூட உனக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக தலைவர்கள் ஐந்தாறு பேர் உனக்காக காத்திருந்தார்கள். அண்ணா நீ எங்கே போய் வருகிறாய்.?”

மான் குட்டியின் கேள்வி முயலை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

“நான் இன்னும் பந்தயத்தை முடிக்கவில்லையே, இன்னும் பொழுது சாயவில்லையே; அதற்குள் நீங்கள் ஏன் கலைந்து போனீர்கள்?” என்று கேட்டது வெள்ளை முயல்.

“முயல் அண்ணா, உனக்கென்ன பைத்தியமா? நேற்று ஒருநாள் தானே பந்தயம் வைத்திருந்தோம். பந்தயம் முடிந்து நேற்றே எல்லாருக்கும் பரிசு கொடுத்தாய் விட்டது. உனக்குக் கொடுக்க வேண்டிய தங்கக்