பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

கோப்பையை யானையார் தான் இருக்கும் இடத்திலுள்ள அரசமரப் பொந்தில் பத்திரமாக வைத்திருக்கிறார். வா போய்ப் பார்க்கலாம். பாவம் எல்லார் முன்னேயும் நீ பரிசு வாங்கினால் எவ்வளவு பெருமையாய் இருக்கும்” என்று கூறி வெள்ளை முயலை மான்குட்டி யானையாரிடம் அழைத்துச் சென்றது.

யானையார் “பரிசு வாங்கக் கூட இருக்காமல் எங்கே போனாய்?” என்று கோபித்துக் கொண்டார். ஆனால் முயலின் ஒட்டத்தைப் பாராட்டினார். “கதிரவன் கூட உன் வேகத்திற்குத் தோற்றுப் போவான்” என்று யானையார் சொன்ன போதுதான் முயலுக்கு உண்மை புரிந்தது.

சிவபெருமான் வரங்கொடுத்தபடி அது கதிரவனின் வேகத்தில் பாய்ந்து சென்றதால், கதிரவனும் அந்த முயலும் ஒரே வேகத்தில் போயிருக்கின்றன. அதனால்தான் அது எப்போது திரும்பிப் பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு நேரேயே இருந்திருக்கிறான். பொழுதும் சாயாமல் இருளும் வராமல் இருபத்து நான்கு மணிநேரம் ஓடி இருந்த இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது. அதற்குத் தெரியாமலே அந்தக் காட்டில் ஒரு நாள் ஒடிப்போய் இருக்கிறது.

தான் இல்லாவிட்டாலும் தனக்காகப் பரிசை வைத்திருந்த காட்டு விலங்குகளின் பெருந்தன்மையை எண்ணி அது மனம் பூரித்தது.