பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
பகைவென்ற
சிறு முயல்

வேலூருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டை வேலூர்க்காடு என்றே மக்கள் அழைப்பார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய நாகப் பாம்பு வாழ்ந்து வந்தது. அந்த நாகப் பாம்பு அந்தக் காடு முழுவதும் சுற்றிச் சுற்றி வரும். பெரிய மிருகங்களை அது பெரும்பாலும் நெருங்குவதில்லை. தவளை, கோழிக்குஞ்சு போன்ற சில உயிர்களைக் கொன்று தின்பது அதன்வழக்கம். ஆடு, நாய், முயல், குரங்கு, மான்போன்றவற்றையும் அது சில சமயம் ஏதாவது காரணம் கூறிச் சீறிப் பாய்ந்து திண்டிவிடும். அந்தச் சின்ன உயிர்கள் நஞ்சு தாங்காமல் இறந்து போகும்.

ஒரு நாள் அந்த வேலூர்க் காட்டின் வழியாக ஒரு பார்ப்பன வழிப் போக்கன் சென்று கொண்டிருந்தான். அவன் தலையில் அரிசிமூட்டையும், தோளில் காய்கறிகள் நிறைந்த ஒரு மூட்டையும், கையில் ஒரு செம்பு நிறையப் பாலும் வைத்திருந்தான். அவன் காட்டு வழியாக நடந்து செல்லும் போது பாதையின் குறுக்கே அயர்ந்து படுத்திருந்த நாகப் பாம்பைக் கவனிக்க