உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வில்லை. ஏதோ நினைப்பில் நடந்து கொண்டிருந்த அவன் தெரியாமல் அந்தப் பாம்பை மிதித்துவிட்டான்.

நாகப் பாம்பு சீறிக் கொண்டு அவனைக் கடிக்க வந்தது. அவன் பயந்து தொங்கு, தொங்கென்று ஓடினான். அப்படி ஒடும்போது அவன் கையில் இருந்த பால் செம்பு கீழே விழுந்தது. செம்பில் இருந்த பாலில் ஒருபாதி கீழே கொட்டிவிட்டது. மேலும் ஒரு பாதி செம்பில் இருந்தது.

பின்னால் துரத்திக் கொண்டு வந்த நாகப் பாம்பு கீழே சிந்திய பாலைக் குடித்தது. பிறகு செம்பினுள் இருந்த பாலையும் குடித்தது. அகன் சீற்றம் தணிந்தது. செம்பை எடுப்பதற்காக திரும்பிய பார்ப்பனன் செம்புப் பாலை நாகப்பாம்பு குடிப்பதைப் பார்த்துவிட்டு அப்பொழுது ஓடினால்தான் தப்பமுடியும் என்று ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான். நாகப்பாம்பும் வயிறு நிறைந்து விட்டதால் பார்ப்பனனை விரட்டு வதை மறந்துவிட்டது.