உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


இரண்டு நாள் கழித்து அந்தப் பார்ப்பனன் அந்த வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தான். வழியில் தான் போட்டுச் சென்ற பால் செம்பு கிடப்பதைக் கண்டு அதை எடுப்பதற்காக அதை நோக்கிச் சென்றான். சிறிது தொலைவிலேயே அந்த செம்பைச்சுற்றிக் கொண்டு நாகப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டான். பயந்து வேறு வழியாக ஓடினான்.

அவன் ஒடுகின்ற ஓசையைக் கேட்டு நாகப்பாம்பு விழித்துக் கொண்டது.

“பார்ப்பனரே, பார்ப்பனரே சிறிது நில்லும்” என்று பாம்பு கத்தியது.

பார்ப்பனன் மேலும் வெகமாக ஓடினான். நாகப் பாம்பு விரட்டிக் கொண்டு சென்றது. பார்ப்பனன் ஒடும் வழியில் வேகமாகச் சென்று எதிரில் நின்று படமெடுத்தாடத் தொடங்கியது.

பார்ப்பனன் வெல வெலத்துப் போனான். “நாக ராசா, உன்னைக் கும்பிடுகிறேன். என்னைக் கடிக்காமல் விட்டு விடு” என்று பார்ப்பனன் கெஞ்சினான்.

“பார்ப்பனரே, உம்மை நான் கடிக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு நாளைக்கு முன் நீர்கொண்டு வந்த பால் மிகச் சுவையாக இருந்தது. அது போல் வாரம் ஒரு முறையாவது எனக்கு நீர் பால் கொண்டு வந்து தர வேண்டும். அப்படிச் செய்தால் உம்மையும் கடிக்க