பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும்போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும்.

இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு. நாரா நாச்சி யப்பன் உங்களுக்கு இங்கே பத்துக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார்.

பத்தும் பத்து விதமான கற்பனை. படிக்கப் படிக்கச் சுவையூட்டும் மிக விந்தையான இந்த முயல்கள், உங்கள் மனத்தை விட்டுப் போகா.

இந்த முயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வோர் அருமையான கருத்தை விளக்குக்கின்றன. கருத்துக்குக் கருத்து-கதைக்குக் கதை-வாழ்க்கைக்கு வழிகாட்டி!

இந்த அருமையான கதைகளை நீங்கள் படியுங்கள்-உங்கள் நண்பர்களைப் படிக்கச் சொல்லுங்கள்-உங்கள் தம்பி தங்கையருக்குச் சொல்லுங்கள். உங்கள் அருமைப் பெற்றோருக்கும் புதிய கதை சொல்லிக் களிப்படையச் செய்யுங்கள். உங்கள் வீடு இன்பமயமாகத் திகழ இந்தக் கதைகள் பயன்படும்.

-தமிழாலயம்