உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


சின்னஞ்சிறு விலங்குகளை சீறிப்பாய்ந்து தீண்டிக் கொன்று விடும். பெரிய விலங்குகளை அவை தூங்கும் போது கடித்துக் கொன்றுவிடும். நாளுக்கு நாள் காட்டு விலங்குகள் பாம்பினால் இறந்து வந்தன. அதன் தொல்லையை அவற்றால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் காட்டில் உள்ள விலங்குகளெல்லாம் ஒன்று கூடிப் பாம்பின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி என்று ஆலோசனை செய்தன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைச் சொன்னது. ஆனால் எந்த வழியும் சரியாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய விலங்குகளெல்லாம். தங்களால் அந்தப் பாம்பின் தலையை நசுக்கிக் கொன்று விட முடியும் என்றும், ஆனால் தாங்கள் கொல்லுவதற்கு முன்னால் அந்தப் பாம்பு தங்களைக் கடித்து விட்டால் உடல் முழுதும் நஞ்சு பரவி தாங்கள் இறந்து போக நேரும் என்றும் அஞ்சின. சிறிய விலங்குகளோ பாம்பின் எதிரில் செல்லவே பயந்தன. இந்த நிலையில் எந்த முடிவுக்கும் வர முடியாமல் அவை கலைந்து போயின.

பாம்பின் அட்டூழியம் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு புதர் நிழலில் சின்ன முயல் ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. அதன் உடம்பில் ஏதோ வளவள என்று ஊறுவது போல் இருந்தது. கண் விழித்த முயல் தன் மீது அந்த நாகப் பாம்பு ஊர்ந்து