பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

செல்வதைக் கண்டது. ஒரே பாய்ச்சலில் முயல் தாவிக் குதித்தது, பாம்பு எங்கோ சிதறி விழுந்தது.

“குட்டி முயலே, என்னைத் தட்டிவிட்டா ஒடுகிறாய். இருஇரு உன்னை என்னசெய்கிறேன்” என்று சீறிக்கொண்டே பாம்பு சென்றது.

அந்தச் சின்ன முயல் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று பாய்ந்தோடி ஒரு மரத்தடியில் நின்றது. அந்த மரத்தின் கிளை ஒன்றில் ஒரு குரங்கு குந்திக் கொண்டிருந்தது.

“சின்ன முயலே, சின்ன முயலே என்ன வேகம், என்ன வேகம்” என்று குரங்கு கூறியது.

“குரங்கண்ணா இது வெறும் வேகம் இல்லை, உயிர் வேகம்! உயிர் தப்புவதற்காக ஓடிவந்த வேகம்” என்று முயல் கூறியது.

“இந்தக் காட்டிலலே நீதான் அழகானவன். நீ யாருக்குப் பயந்து ஓடி வருகிறாய்?” என்று குரங்கு கேட்டது. “அந்த நாசமாய்ப்போன நாகப் பாம்புக்குப் பயந்து தான் ஓடி வருகிறேன்” என்றது முயல்.

குரங்கு தொபுக்கென்று கீழே குதித்தது. முயலின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. “குட்டி முயலே இந்த நாகப்பாம்பைத் தொலைப்பதற்கு ஒரு வழியும் இல்லையா?” என்று ஆத்திரத்தோடு கேட்டது.

அ-4