பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


“இந்த மனிதர்கள் பாம்புக்குப் பால் வார்க்கிறார்கள். அதற்குத் தலையில் கொழுப்பு ஏறி விட்டது. அதைத் தொலைத்தால் தான் நாம் அமைதியாகத் தூங்கமுடியும்” என்றது குட்டி முயல்.

“குட்டி முயலே இதற்கு ஒரு வழி கண்டு பிடி. எனக்கும் தூக்கம் சரியாக வரவில்லை. சில சமயம் என் வாலைப் பார்த்தே பாம்பென்று நான் பயந்து விடுகிறேன்” என்றது குரங்கு.

குட்டி முயல் ஒன்றும் பதில் சொல்லவில்லை. வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.