பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9
சின்ன முயலும்
சிங்க அரசனும்

காவிரியாற்றங்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஓர் அரசாங்கம் நடந்தது. அந்த அரசாங்கத்தில் யார் மன்னராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

எந்தக் காட்டு அரசாங்கத்திற்கும் மன்னராக இருக்கக் கூடிய தகுதி சிங்கம் ஒன்றுக்கே இருந்தது. அதுபோல் அந்தக் காட்டுக்கும் ஒரு சிங்கம்தான் அரசராக இருந்தது.

ஒரு நாள் இரவில் முழு நிலா தன் பால் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்த அழகிய நிலவொளியில் காட்டின் நடுவில் ஒரு வெட்ட வெளியில் அரசவை கூடியது.

உயர்ந்த அரியணை ஒன்றில் சிங்கமாமன்னர் அமர்ந்திருந்தார். அருகில் கூரிய வாள் தக தகவென மின்ன அதை வாயில் பற்றியபடி படைத்தலைவர்