உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57

கூடப் பயனில்லை. நீ எனக்கு என்ன உதவி செய்து விடப்போகிறாய்? ஒன்றுமில்லை. இருந்தாலும் சரி, உன் விருப்பம் என்ன சொல்” என்று கேட்டது சிங்க மன்னன்.

“அரசே, சின்னவனின் ஆசை எல்லாம் தங்கள் அரசவையில் ஒர் அமைச்சனாக வீற்றிருக்க வேண்டும் என்பதுதான். இதைத் தாங்கள் மறுக்கக் கூடாது” என்றது முயல்.

சிங்கம் ஆவாவா என்று சிரித்தது. அதன் சிரிப்பொலி அந்தக் காடெங்கும் எதிரொலித்தது. சின்ன முயல் சிங்கத்தின் பதிலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தது.

“பிடித்தால் ஒரு பிடி இருக்க மாட்டாய், உனக்கு அமைச்சர் பதவியா? யாருக்கு என்ன ஆசை இருக்க வேண்டும் என்ற கணக்கே இல்லாமல் போய் விட்டது” என்று கூறிய சிங்கம் முயலை உற்று நோக்கியது.