பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64


மற்ற அமைச்சர்களுக்கு முயல் சொன்ன கருத்துச் சரியாக தோன்றாவிட்டாலும், சிங்கஅரசன் அதை ஊக்கப்படுத்திப் பேசியதால் அவை வாய்மூடிக் கொண்டிருந்தன. சிங்கம் சரி என்று நினைக்கிற ஒரு கருத்தை மறுத்துச் சொன்னால் அதற்குக் கோபம் வந்து விடும் என்று கருதியே அவை பேசாமல் இருந்தன. .

முயல் சொன்ன கருத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க அது மிகச்சரியான கருத்தாகத் தோன்றியது சிங்கமன்னனுக்கு. ஆனால் தன்னைப்போலவே அடுத்த காட்டு மன்னனும் நல்ல எண்ணம் உள்ளவனாக இருந்தால்தான் இந்த முயற்சி வெற்றி பெறும். இல்லாவிட்டால் இது பைத்தியக்காரத்தனமாகவே கருதப்படும். இந்த நிலையில் முயலை ஆதரிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் சிங்கம் சிந்தித்தது "விலங்கு இனத்தின் நன்மையை முன்னிட்டுக் கட்டளையிடுங்கள்" என்று முயல் குட்டி சொன்ன சொற்கள் சிங்கத்தின் மனத்தில் ஒரு மந்திரம் போல் பதிந்து விட்டன. முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்று அது நினைத்தது.

"குட்டிப் பயலே, இப்பொழுது நாம் பேசுவது எளிய செயலைப் பற்றியதல்ல. வாழ்வா, சாவா என்ற மிகப்பெரிய லட்சியத்தைப் பற்றியது ஆகும். ஆகவே இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கு ஒருநாள் தவணை தருகிறேன். நாளை இரவு