ஜாதகத்தைப் பார்த்து விட்டு இந்த வாரத்திற்குள் போர் தொடங்கினால் எனக்கு வெற்றி நிச்சயமென்றும் அந்த வெற்றிக்கு அடையாளமாகச் சிவபெருமான் ஒரு முயல் தூதரை அனுப்புவாரென்றும், அந்தச் சோதிடர் சொன்னார். அவர் சொன்னபடியே இன்னும் இரண்டு நாளில் அடுத்த காட்டின் மேல் படையெடுக்கப் போகிறேன். அந்தப் போரில் எனக்குத் தான் வெற்றி என்பதற்கு அடையாளமாகச் சிவதூதர் நீரும் வந்து விட்டீர். அந்தச் சோதிடன் திறமைசாலி தான்!" என்று அந்த கிழட்டுச் சிங்கம் கூறியது.
அதைக்கேட்ட முயல் கலகலவென்று சிரித்தது. "அரசே, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டுகிறேன். தங்கள் காட்டில் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன???
"ஏழு"
"எத்தனை புலிகள் இருக்கின்றன?"
"இருபது"
"எத்தனை யானைகள்?"
"ஐம்பது"
"குைதிரைகள்?"
"முப்பது."
"அரசே, நான் சொல்லுவதைத் தாங்கள் சினங்கொள்ளாமல் கேட்க வேண்டுகிறேன். தங்களிடம் உள்ள வலிமை மிக்க விலங்குகளின் தொகை மிகக்