பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68


குறைவாக இருக்கிறது. பக்கத்துக் காட்டிலோ பத்து மடங்கு கொடிய விலங்குகள் உள்ளன. அவை அத்தனையும் ஒன்று சேர்ந்து தங்கள் காட்டைத் தாக் கினால் அரைமணி நேரத்தில் ஒன்றுகூட மிஞ்சாமல் போய்விடும்,

"யாரோ வழியில் அகப்பட்ட சோதிடன் தான் உயிர் பிழைத்துப் போவதற்காகச் சொல்லிய பொய்யுரையை நம்பிக் கொண்டு தாங்கள் போராடப் புறப்படுவது பேதைமையாகும்.

"இந்த வழியாக வந்த நான் நம் அரசரைப் பார்த்து வாழ்த்துப்பெற்றுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன். தாங்களோ பாதுகாப்பே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சரியான வலுவில்லாமல் பகையைத் தேடிக் கொள்வது நமக்கே தீமையாக முடியும். :பக்கத்துக் காட்டில் உள்ளவர்கள் போரைப் பற்றியே நினைக்காமல் இருக்கும் போது நீங்கள் ஓர் போரை உண்டாக்கி வீணாகப் பல உயிர்களை இழக்க முடிவு செய்திருப்பது சரியல்ல."

"தாங்கள் விரும்பினால், நான் பக்கத்துக்காட்டு அரசனுடன் தங்களுக்கு நட்பு ஏற்படச் செய்கிறேன். இருவரும் நண்பர்களாகவும் ஒற்றுமையாகவும் இருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டுகிறேன்."

முயலைச் சிவபெருமான் தூதரென்றே நினைத்துக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கம் அதன் சொல்லுக்கு மதிப்பு அளித்தது.