உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72


இரண்டு முயல்களும் போட்டிபோட்டுக் கொண்டு பாய்ந்த போது, ஒரு மரத்தடியில் படுத்திருந்த ஒரு காட்டானை மீது விழுந்தன. சினத்தோடு விழித்தெழுந்த காட்டானை தன் துதிக்கையை நீட்டி அவற்றை வளைத்துப் பிடித்து வீசி எறிந்தது. விட்டெறிந்த பந்துகளைப் போல் அந்த முயல் குட்டிகள் இரண்டும் ஒரு தேக்க மரத்தின் அடியில் மோதி விழுந் தன. உடம்பெல்லாம் ஒரே வலி!

இன்னொருமுறை என் தூக்கத்தைக் கெடுத்தால் உங்களை வானுலகத்திற்கே அனுப்பி விடுவேன் என்று அந்தக் காட்டானை பிளிறியது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்தக் குட்டி முயல்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்தன.

ஒரு கால்வாய்க் கரையில் இருந்த மாமரத்தின் அடியில் இரண்டு முயல்குட்டிகளும் இளைப்பாறுவதற்-