உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


அப்பம் மேலே மேலே வந்தது. ஆனால் முயல் குட்டிக்கு அருகில் வரவில்லை. தொலைவிலேயே இருந்தது. தொலைவில் இருந்தபடியே வானத்தின் உச்சிக்குப் போய் விட்டது.

மலை உச்சியிலிருந்து வானத்து உச்சியையே பார்த்துக் கொண்டிருந்த முயல் குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்பம் எட்டவில்லையே, அப்பம் எட்டவில்லையே என்று கத்திக் கதறி அழுது கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக ஒரு காட்டு யானை வந்தது.

'யானையாரே, யானையாரே,உச்சியில்இருக்கும் அப்பம் எனக்கு எட்டவில்லை. உங்கள் நீண்ட துதிக்கையால் அதைப் பிடித்துத் தாருங்கள்” என்று குட்டி முயல் கேட்டது.

யானை வானத்தை நோக்கித் தன் துதிக்கையை நீட்டி அப்பத்தைப் பிடிக்க முயன்றது. அந்த முயற்சியில் தன் முன்னங்கால் இரண்டையும் மேலே தூக்கி துதிக்கையை நீட்டிக் கொண்டு அது எழுந்து நின்ற பொழுது தடுமாறி மலைச்சரிவில் உருண்டு விழுந்து விட்டது.

முயல்குட்டிக்கு மேலும் அழுகை அழுகையாக வந்தது. யானையார் விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை. அப்பத்தைப் பிடிக்கவும் முடியவில்லை. என்ன செய்வேன் என்று சொல்லி அது