பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 அப்பர் தேவார அமுது



1. அச்சம் இல்லை

மனிதன் அறிவுப்பலம் உடையவனே அன்றி உடற். பலம்இல்லாதவன். யானை, காண்டாமிருகம், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதனை விட அதிக உடல் வலிமை உடையவை. ஆனாலும் அவை மனிதனால் அடக்கப்பெற்று அவன் ஏவும்படியெல்லாம் செய்கின்றன.

மனிதர்கள் யாவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உடல் வலிமையிலும் சரி, அறிவுத் திறத்திலும் சரி, ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கிருர்கள். பலம் இல்லாதவன் பலம் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களால் நலம் பெறுகிறான். அறிவில் தாழ்ந்தவன் அறிவுடையவர்களைச் சேர்ந்து விளக்கம் அடைகிருன்.

சார்பினால் வலிமைபெறும் தந்திரத்தை மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். அவனால் மிக வேகமாக ஒட முடியாது. ஆனால் வேகமாக ஒடும் குதிரையின்மேல் ஏறி வேகமாகச் செல்கிறன், ஐம்பெரும் பூதங்களையே தன் அறிவு வன்மையி னால் செயற்படுத்திப் பெரிய செயல்களைச் செய்கிறான்.

தன்னுடைய அறிவுவன்மையால் மனிதன் செய்து வரும் அற்புதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அவ்னால் பறக்க முடியாது. ஆனாலும் ஆகாய விமான்த்தை அறிவுத் திறத்தினால் அமைத்துக் கொண்டு பறக்கிறான். கடல் மூழ்கிக் கப்பலில் ஏறிக் கடலின் ஆழத்தில் பயணம் செய்கிறான் இயல்பாகத் தன்னால் செய்ய முடியாமல் இருப்பினும் மற்றவற்றை இயக்கி வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறான்.

இவ்வாறு தன்னினும் ஆற்றல் மிக்க பொருள்களைக் செய்ல்படுத்தக் கற்றுக்கொண்டதனால் பெரிய பெரிய காரியங்