பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அப்பர் தேவார அமுது

என்றென்றே பரவி நாளும். அவன் சிவந்த பொன்னைப் போலக் காட்சி அளிப்பான்; பவளக் குன்று போன்ற திருக்கோலத்துடன் ஒளிர்வான். அந்த இயல்புகளைச் சொல்லி அவனை விளித்துத் துதித்து மகிழ் வார்கள் அடியவர்கள். - -

செம்பொனே! பவளக்குன்றே! அவனை விட உயிர்களுக்கு அன்பன் வேறு இல்லை. உயிர் களிடத்தில் வைத்த பேரன்பினுல் அவன் தனு கரண புவன போகங்களை வழங்கியிருக்கிருன். -

அன்பனே! - அந்தப் பெருமானுடைய திருவடியைக் காணவேண்டு மென்று ஏங்கித் தவித்து நிற்பார்கள் மெய்யன்பர்கள்.

திகழ் மலர்ப் பாதம் காண்பான் அன்பனே! அலந்து போனேன். ஒவ்வொரு நாளும் வாயில்ை அவனுடைய திருநாமங் களைச் சொல்லிச் சொல்லி உருகுவதும், அவனுடைய திருவடி களை உண்முகத்தே தரிசித்து, இறுதியிலே அவற்ருேடு இரண் டறக் கலக்க வேண்டும் என்று ஏங்குவதும் அடியவர்கள் இயல்பு.

இதை அப்பர் சுவாமிகள் திகுவாக்கால் உணர்ந்து கொள்கிருேம்.

கம்பனே, எங்கள் கோவே,

நாதனே, ஆதி மூர்த்தி, பங்கனே, பரம யோகி, .

என்றென்றே பரவி நாளும், செம்பொனே, பவளக் குன்றே,

திகழ்மலர்ப் பாதம் காண்பான் அன்பனே, அலங்து போனேன்;

அதிகைவி ரட்ட வீரே!