பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}0 அப்பர் தேவார அமுது:

'கைஒன்று செய்ய விழிஒன்று நாடக்

கருத்துஒன்றுஎண்னை பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்

புலால்கமழும் மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க

விரும்புமியான் செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்

வாய்வினை தீர்த்தவனே?”

என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடுகிருர். அப்படி நாம் ஒரு லட்சியத்தைப் பெற எண்ணி முயன்ருல் ஐம்பொறிகளும் மாருகத் தொழிற்படுகின்றன.

வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார். அந்த ஐம்பொறிகளைக் கொண்டே நாம் நம் லட்சியத்தை அடையப் பாடுபட வேண்டும். இறைவன் திருவுருவைக் காணக் கண்ணும் அவன் புகழைக் கேட்கச் செவியும் வேண்டும். அவனை வணங்க உடம்பு நம் விருப்பப்படி வளைந்து வர வேண்டும். கருவி கரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கிச் சென்ருல் லட்சியத்தை அடைவது எப்படி?

இந்த நிலையில் அல்லற்பட்ட அப்பர் இறைவனுடைய சிவந்த தாமரை போன்ற செம்மையான திருவடிகளைத் தரிசிக்க ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறக் கருவி கரணங்கள் ஒத்துழைக்க வேண்டாம்ா? அவை ஏறுக்கு மாருக. இருந்தால் இறைவனை எப்படி வழிபடுவது? பொறிகளின் திரு விளையாடல்களினூடே சிக்கித் தவிக்கும்போது இறைவனைத். தரிசிப்பது எப்படி? புகழ்வது எப்படி? அவன் திருக்கோயிலை வலம் வருவது எப்படி? பூஜை புரிவது எப்படி? தியானம். செய்வது எப்படி? ஒன்றும் செய்ய முடியாது.

இந்த ஐவர்களின் போராட்டத்தைப் போக்க என்ன செய்வது? அறிவிலுைம் ஆற்றலாலும் மிக்கவர்கள் உலகில்