பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அயர்த்துப் போனேன்

மக்களைப் பிணிக்கும் நோய்களில் மிகவும் வலியது காமம் என்னும் நோய். பெருந்தவம் செய்த விசுவாமித்திரர் முதலியவர்களும் அந்த நோய்க்கு ஆளாகி அதுகாறும் செய்த தவத்தைக் குலைத்துக்கொண்டிருக்கிருர்கள். உடல் வலிமை உள்ள ஒருவனுக்கு நோய் வந்தால் அந்த நோய் அவனுடைய வலிமையைப் போக்கி மெலிவை உண்டாக்குவது போல, திண்மையான நெஞ்சுடையவர்களும் காம நோயின் வாய்ப் பட்டால் மனத்திண்மை குறைந்து அல்லற்படுகிருர்கள். காம நோயை அண்டாமல் செய்து, அது தலைகாட்டினுல் அதை அழிக்கும் ஆற்றல் பெற்றவர்களின் உள்ளத்தில் இறைவன் தன் அருள் தோன்ற வந்து நிற்பான்.

அப்பர் சுவாமிகள் இந்த நோயால் அலைக்கப்பட்டதாகச் சொல்கிருர். அவர் இளமைக் காலத்தில் அப்படி இருந்திருக் கலாம். இறைவனுடைய அருளைப் பெற்ற காலத்திலும் அந்தப் பழைய வாழ்க்கையை நினைந்து இரங்குகிருர், நான் காமம் என்னும் வெம்மையான நோயைக் கழிக்காமல் இருந் தேனே' என்கிருர், .

கழித்திலேன் காம வெங்கோய்,

சுற்றத்தார் என்றும் நண்பர்கள் என்றும் எண்ணி அவர்கள்பாலும், நமக்கு இனிய பொருள்களென்று இந்திரிய சுகத்தைத் தரும் பொருள்களின்பாலும் பற்று வைத்து அவற்றினிடம் ஆசை கொண்டு அந்தப் பாசத்தால் துன் புற்ருராம். அதை ஒழிக்கவில்லையாம்.

காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன்.