பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர்த்துப் போனேன் ió5

1.இது தகாதது; இது தக்கது” என்று தேர்ந்து தக்கதை ஈட்டிக்

கொள்ளலாம். அறிவில்லாத வெளிறு படைத்த நாமேர்

பாவத்தையே ஈட்டி மூட்டை கட்டிக்கொள்கிருேம். அவ்வாறு

செய்வதல்ை நாம் அறியாமையை உடையவர்கள் என்பதை

அறிஞர்கள் தெரிந்து கொள்கிருர்கள். - - - - -

வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்.

நாம் சொல்ல வேண்டியதை அப்பர் சுவாமிகள் சொல்லிக் கொள்கிருர்,

இந்தப் பிறவி எடுப்பது நாம் முன் செய்த விக்னகளை அநுபவித்துப் போக்கிக் கொள்வதற்காக, ஆற்றில் நீராடப் போகிறவர்கள் நீரில் மூழ்கித் தம் உடம்பிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வார்கள். எருமையோ ஆற்றின் ஒரக்காலில் உள்ள சேற்றிலே விழுந்து புரண்டு அழுக்கை ஏற்றிக் கொள்ளும். அறிஞர்கள் ஆற்றில் நீர் ஒடும் இடத்துக்குச் சென்று குள்ளக் குளிர நீராடித் தூய்மை பெறுவார்கள்.

வினையை அநுபவித்துத் தீர்த்துக்கொள்ளும்படி இந்தப் பிறவியை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிருன். நாமோ பழைய வினையை அதுபவித்துத் தீர்த்துக்கொண்டே புதிய வினையைச் சேர்த்துக்கொள்கிருேம். பழைய வினைக்குப் பிராரப்தம் என்று பெயர். நாம் ஈட்டும் புதிய வினைக்கு ஆகாம்யம் என்று பெயர். பிராரப்தத்தைக் கழித்துக் கொள்வ தோடு நில்லாமல் ஆகாம்யத்தைக் கூட்டிக் கொள்கிருேம். இது அறியாமையின் விளைவு.

வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்.

வினைகளை அழிக்கும் பரிகாரங்களை நாம் நாடுவதில்லை.இப் போது அநுபவிக்கும் வினைப்பயைேடு நின்றுவிட்டால் இனிப்