பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. ஊடலும் ஆடலும்

பகீரதன் யார் யாரையோ நோக்கித் தவம் புரிந்தும் கங்கையைக் கொண்டுவர முடியவில்லை. கங்கையையே வேண்டித் தவம்புரிந்தான். “நான் இறங்கி வந்தால் என்னைத் தாங்குவார் யார்?' என்று இறுமாப்புடன் அவள் சொன்னுள். பிறகு பகீரதன் இறைவனை நோக்கித் தவம் புரிந்தான். இறைவன் கங்கையை ஏற்றுக் கொள்வதாக அருள் பாலித் தான். மறுபடியும் கங்கையை நோக்கித் தவம் செய்து அவளை இறங்கி வரும்படி வேண்டினன். கங்கையோ மிக்க செருக் கோடு, விண்ணுக் கடங்காமல், வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் அலைகளை வீசிக்கொண்டு வந்தாள். இறைவன் கங்கையைத் தன் ஒரு சடையில் ஒரு துளியைப் போல ஏற்று அடக்கின்ை. மறுபடியும் பகீரதன் தவம் புரியக் கங்கையை வெளியிலே ஒடுமாறு விட்டு அவனுடைய முன்னேர்களின் எலும்பிலே பாயச் செய்தான். அதல்ை அவர்கள் நற்கதியை அடைந்தார்கள்.

கங்கை ஆரவாரத்தோடு வந்தபோது அவளை இறைவன் தன் சடையில் ஏற்றுச் சூடினன்.

சூடிஞர் கங்கையா8ள.

அவள் வந்த ஆரவாரத்தை உமாதேவி கேட்டாள். தன் னுடைய கொழுநன் தலையின்மேலே ஒருத்தி வந்து அமர்ந்து கொண்டதையும், அவளை அவன் தலையால் தாங்குவதையும் அறிந்த அன்னைக்குக் கோபம் வந்துவிட்டது. யாரோ ஒருத்தியை இவர் நம்மை அறியாமல் தலையாலே தாங்கு கிருரே! என்று ஊடல் கொண்டாள்.

குடிய துழனி கேட்டு அங்கு

ஊடினுள் கங்கையாளும்.