பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அப்பர் தேவார அமுது

இறைவன் எம்பெருமாட்டி ஊடல் கொண்டிருக்கிருள்

என்பதை உணர்ந்து கொண்டான். அதைப் போக்குவது எட் படி என்று யோசித்தான். பெண்களுக்கு ஆடல் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆகவே அம்பிகையின் ஊடலை நீக்க வேண்டி வாய் திறந்து சாம வேதத்தைப் பாடினன். அவன் எப்போதும் சாம வேதத்தைப் பாடிக் கொண்டே இருப்பவன். 'சாம வேத கீதர்” என்று அவனைச் சொல்வார்கள். இப்போது அம்பிகை யின் காதில் நன்ருக விழும்படியாகச் சாமவேதத்தைப் பாடி ஒன்.

ஊடலை ஒழிக்க வேண்டிப்

பாடிஞர் சாம வேதம்.

அதோடு நிற்கவில்லை. ஆடுவதென்ருல் அண்ணலுக்கு மிகவும் விருப்பம். பாடிக்கொண்டே தாளம் போட்டான் அந்தத் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடின்ை.

பாடிய பாணியாலே

ஆடினர்.

பாடும் போதே இறைவியின் கோபத்தில் பாதி போய் விட்டது. அவன் தாளம் போட்டு ஆடத் தொடங்கவே பெருமாட்டியின் ஊடல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. அவளும் தாளம் போடத் தொடங்கி விட்டாள் ஐயன் நடன மிடும்போது அம்மை தாளம் கொட்டுவது வழக்கம். தன்னை அறியாமலே கைகள் தாளம் கொட்ட கண்கள் ஐயனுடைய திரு நடனத்தைக் கண்டு களிக்க கங்கை சடையில் இருப்பதை மறந்தாள்; சினத்தை விட்டாள்

இப்படிச் செய்தான் இறைவன் என்பதைத் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பாடும்போது சொல்கிருர் அப்பர் சுவாமிகள். கெடிலத்தை ஒரு பக்க எல்லை யாக உடைய திருவதிகை வீரட்டானத்துப் பெருமான் கங்கை யைச் சூடி, அதனல் ஊடல் கொண்ட உமை மங்கைக்காக ஆடி, அமைதியை உண்டாக்கின்ை.